இலங்கை

ரயில் விபத்து தண்டவாள ஆணிகள் கழற்றியதாக சந்தேகம்: ஒருவர் கைது

Desktop Image Mobile Image

இன்று (16) காலை இடம்பெற்ற ரயில் விபத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆணிகளை கழற்றியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொட பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

மேலும், தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்ட ஆணிகளை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்ற நபரும் இவரே என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button