இலங்கை

வனவாசல விபத்து பின்னணி அம்பலம்: 3,000 ரூபாய்க்காக நடந்த ஆபத்தான செயல்

Desktop Image Mobile Image

வனவாசல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்துடன் தொடர்புடையதாக கழற்றப்பட்ட தண்டவாளப் பாகங்கள் 3,000 ரூபாய் தொகைக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேல் மாகாண வட பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ரயில் தண்டவாளத்தின் ஆணிகள் மற்றும் பாகங்களை கழற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அந்தப் பொருட்களை வாங்கிய இடம் அடையாளம் காணப்பட்டு அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தண்டவாளப் பாகங்களை அகற்றிய நபர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான 25 வயதுடைய இளைஞர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனவாசல ரயில் விபத்து தொடர்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

 

 

இதனுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மட்டுமன்றி, இந்த விபத்தால் ஏற்பட்ட நட்டஈடுகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருடப்பட்ட பொதுச் சொத்துகளை அறிந்தே கொள்வனவு செய்த நபருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button