முல்லைத்தீவுஇலங்கைவடக்கு மாகாணம்

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

Desktop Image Mobile Image

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று தாயகத்தின் பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் சிறப்பு நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட மக்கள், தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து மலர்தூவி, சுடரேற்றி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

நிகழ்வில் உணர்வுபூர்வமான சூழல் நிலவியதுடன், தமது உயிரிழந்த தமது உறவுகளுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

Related Articles

Back to top button