யாழ்ப்பாணம்இலங்கைவடக்கு மாகாணம்

யாழில் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு: நபர் உயிரிழந்த சம்பவம்

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (18.05.2026) இடம்பெற்றுள்ளது.

நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணை நடவடிக்கைக்காக அவர் நேற்று யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

 

 

இதனைத் தொடர்ந்து பொலிஸார் அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button