ஜப்பானில் 5.9 ரிக்டர் நிலநடுக்கம்

தெற்கு ஜப்பானில் உள்ளூர் நேரப்படி காலை 11:46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 50 கிலோமீட்டர் ஆழத்தில் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
ககோஷிமா மாகாணத்தின் தெற்கு அமாமி பகுதியில் இந்த அதிர்வு உணரப்பட்டதாகவும், எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை சேதம் அல்லது காயங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள ஜப்பான், உலகின் அதிக நில அதிர்வு ஏற்படும் நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அங்கு கடுமையான கட்டிட பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் உள்ளதால், நிலநடுக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இன்று (20) ஏற்பட்ட இந்த மிதமான நிலநடுக்கத்துக்குப் பின்னர், பின்தொடர் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் உள்ளனர்.




