திருகோணமலையில் போதை தடுப்பு விழிப்புணர்வு நடைபவணி

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி இன்று (23) திருகோணமலையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, பங்கேற்பாளர்கள் திருகோணமலை ஆளுநர் செயலகத்திலிருந்து திருகோணமலை பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக நடைபவணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அருண்கேமச் சந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன் மற்றும் ரொசான் அக்மீமன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், இளைஞர் சம்மேளனங்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பல தரப்பினரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வின் போது போதை ஒழிப்பு மற்றும் இளைஞர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உரையாடல்களும் இடம்பெற்றன.




