
கண்டி மாவட்டம் அக்குறணை, குடுகலை பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையமொன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், பிரதான வீதியின் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள்
எவ்வாறாயினும், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பாகக் கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
சிறிய அறிவுப் பரிசோதனை: கால்பந்து அணியில் மைதானத்தில் பொதுவாக எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?




