மட்டக்களப்பில் வாவியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (19.05.2026) இடம்பெற்றுள்ளது.
குறித்த வாவியில் சடலம் ஒன்று நீரில் மிதப்பதை கண்ட பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மீட்கப்பட்ட சடலம் ஆண் ஒருவருடையது என தெரியவந்துள்ளதுடன், அவரது அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நீதிமன்ற அனுமதி பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.




