
நவம்பர் மாதத்திலும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, வீட்டு உபயோகத்திற்கான 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர் 4,365 ரூபாய்க்கும், 5 கிலோகிராம் சிலிண்டர் 1,750 ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேவேளை, 2.3 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 815 ரூபாயாகத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என்ற அறிவிப்பு, லிட்ரோ எரிவாயுவைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு முக்கிய தகவலாக அமைந்துள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
அறிவை சோதிப்போம். பரிணாமக் கோட்பாட்டுடன் தொடர்புடையவர் யார்?




