எரிவாயு பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! லிட்ரோ எச்சரிக்கை

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்தல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகப் பணம் அறவிடுதல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், அனைத்து லிட்ரோ எரிவாயு விற்பனையாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு அமைவாகவே எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைத் திட்டமிட்டு கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறிக் கட்டணம் வசூலித்தல் மற்றும் அங்கீகரிக்கப்படாத மேலதிக கட்டணங்களை அறவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களின் விற்பனை உரிமைகளும் இரத்து செய்யப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா எச்சரித்துள்ளது.
நுகர்வோர் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விலையில் எரிவாயுவைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




