இலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

தமிழரசுக் கட்சி சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Desktop Image Mobile Image

இலங்கை தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி கிளை அலுவலகத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (16) சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் உப தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் உப செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

மேலும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

 

 

அத்துடன், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button