
புத்தளம் மாவட்டத்தின் உடப்பு, கொத்தாந்தீவு பகுதியில் வீட்டின் முன்பாக அமைந்திருந்த சிறிய கிணற்றில் தவறி விழுந்து ஒரு வருடமும் நான்கு மாதங்களும் வயதுடைய பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (31) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரியபாடு, கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த குறித்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து, உடனடியாக கொத்தாந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் தற்போது புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் உடப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




