இலங்கைசெய்திகள்

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படுமா?

Desktop Image Mobile Image

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கான சவாரிக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போது முதல் கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 110 ரூபா கட்டணத்தை 120 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் 90 ரூபாவை 100 ரூபாவாகவும் அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதத்தைப் போலவே இந்த மாதத்திலும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 25 ரூபா வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

எரிபொருள் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதுடன், சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் முச்சக்கர வண்டி சாரதிகள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இந்தக் கட்டணத் திருத்த யோசனையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதற்கான பதிலை எதிர்வரும் சில நாட்களில் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சாதகமான பதில் கிடைக்காவிட்டால், கட்டண மீட்டர்களைத் திருத்தியமைக்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி சவாரிக் கட்டணங்களை உடனடியாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய கட்டணத்தில் தொழிலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது சாத்தியமற்ற நிலையை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்: காற்றாலை எந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!