வவுனியாஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியாவில் ஏ9 வீதியில் பரபரப்பு: டிப்பர் – கொள்கலன் வாகனங்கள் மோதி விபத்து

Desktop Image Mobile Image

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று மாலை ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிப்பர் வாகனமும் கொள்கலன் வாகனமும் மோதியதில் இரண்டு வாகனங்களுக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட எவருக்கும் காயங்கள் ஏற்படாததால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

விபத்து காரணமாக ஏ9 வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வழமைக்குக் கொண்டு வந்தனர்.

விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button