கந்தளாய் பேராறில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது; ஒருவர் காயம்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், பேராறு இரண்டாம் குலனி பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக வீடொன்று இடிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (30) இரவு சுமார் 8 மணியளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டினுள் இருந்த ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதுடன், அவருக்குக் காலிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மழைக்காலங்களில் குறித்த பகுதியில் மலைநீர் தேங்கி நிற்பதன் காரணமாகவே வீடு இடிந்து விழுந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதேபோன்ற பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நிலையில் பல வீடுகள் அப்பகுதியில் காணப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, மழைக்காலங்களில் நீர் தேங்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!