Desktop Image Mobile Image

இன்றைய ராசிபலன்

12 ராசிகளுக்கான தினசரி பலன்கள்

📅 24 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை
மேஷம்

மேஷம்

வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். தொல்லை தந்த வாகனத்தை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

முழு பலனைப் பார்க்க
ரிஷபம்

ரிஷபம்

இங்கிதமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

முழு பலனைப் பார்க்க
மிதுனம்

மிதுனம்

தள்ளிப் போன சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். சொந்த ஊர் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். கருத்துமோதல் நீங்கி தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

முழு பலனைப் பார்க்க
கடகம்

கடகம்

உங்களின் ஆளுமைத் திறன் கூடும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குழப்பங்கள் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்கள். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

முழு பலனைப் பார்க்க
சிம்மம்

சிம்மம்

பணவரவால் பழைய கடனை அடைப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வாகனச் செலவு குறையும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

முழு பலனைப் பார்க்க
கன்னி

கன்னி

பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்தாதீர். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். தாயின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்.

முழு பலனைப் பார்க்க
துலாம்

துலாம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். சின்னச்சின்ன பிரச்சினைகள் தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

முழு பலனைப் பார்க்க
விருச்சிகம்

விருச்சிகம்

புது எண்ணங்கள் தோன்றும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். இழுபறியான காரியங்கள் கைகூடும். அலுவலகத்தில் புதிய பதவிக்கான போட்டி குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துகளை ஏற்று நடப்பது நல்லது. போட்ட முதல் இரட்டிப்பாகும்.

முழு பலனைப் பார்க்க
தனுசு

தனுசு

குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் வந்து போகும். எதிலும் நிதானமாக செயல்படவும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரரை அனுசரித்து நடப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு தருவார்கள்.

முழு பலனைப் பார்க்க
மகரம்

மகரம்

பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

முழு பலனைப் பார்க்க
கும்பம்

கும்பம்

குடும்பத்தில் உள்ளவர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். பணவரவு திருப்தி தரும். செலவுகளும் தொடரும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

முழு பலனைப் பார்க்க
மீனம்

மீனம்

பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

முழு பலனைப் பார்க்க
Back to top button
Tamil Lk செய்திகள்