விளையாட்டுசெய்திகள்

தந்தையை பிரதிபலிக்கும் சமித் ட்ராவிட்; ரசிகர்கள் பாராட்டு

Desktop Image Mobile Image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ராகுல் ட்ராவிட்டின் மகன் சமித் ட்ராவிட், தனது துடுப்பாட்ட பாணியால் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார்.

சமித் ட்ராவிட் துடுப்பைத் தூக்கும் விதம், பந்தை எதிர்கொள்ளும் முறை, அடிக்கும் பாணி மற்றும் பந்துவீச்சாளர்களை கவனிக்கும் விதம் ஆகிய அனைத்தும் அவரது தந்தை ராகுல் ட்ராவிட்டை பிரதிபலிப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

 

 

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சமித், மகாராஜா டி20 தொடரில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடி, 23 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், நெருக்கடியான சூழல்களிலும் தனது தந்தையைப் போலவே நிதானமாக ஆடும் திறனை வெளிப்படுத்தும் சமித், அதே நேரத்தில் ராகுல் ட்ராவிட்டை விட சற்று வேகமாக ஓட்டங்களை குவிக்கும் திறனையும் கொண்டுள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

 

இந்திய கிரிக்கெட்டின் “தடுப்புச் சுவர்” (The Wall) என அழைக்கப்படும் ராகுல் ட்ராவிட், சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலியுடன் இணைந்து இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர். தனது பொறுமை மற்றும் நிதானமான ஆட்டத்தால் எதிரணி பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்வதில் அவர் தனித்துவம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்