இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி-தென்னிலங்கையில் பதற்றம்!!

Desktop Image Mobile Image

காலி, தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

இன்று காலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், குறித்த நபரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button