கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், கோவிலுக்கு வழிபட வந்த சிறுமிகளை ஏமாற்றி ஆபாச காணொளிகளைப் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசாரிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
மதுரா மாவட்டத்தின் ஜெயின்ட் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கிராமமொன்றில் உள்ள கோவிலில் சியாம் பிகாரி என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி, அவர்களைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆபாச காணொளிகளைப் பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட காணொளிகள்
பதிவு செய்யப்பட்ட காணொளிகளை இணையம் வழியாக வெளிநாடுகளில் உள்ள நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 2025 ஜூன் 17ஆம் திகதி மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சியாம் பிகாரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட கோவிலில் வைத்து அவரைக் கைது செய்தனர்.
நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 2025 ஆகஸ்ட் 18ஆம் திகதி சியாம் பிகாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், 1.43 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!