
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (03) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடலில் அதிகரிக்கும் கொந்தளிப்பு
‘முரசு’ புயல் தற்போது இந்திய நிலப்பரப்புக்குள் பிரவேசித்துள்ளதுடன், தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்குத் திசையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் சாதாரண புயலாகவும், இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் படிப்படியாக வலுவிழக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இதன் தாக்கத்தினால் வங்காள விரிகுடாவின் குறிப்பிட்ட கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
எனவே, ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த புயல் தொடர்பில் வெளியிடப்பட்ட இறுதி எச்சரிக்கை அறிவித்தல் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!