திருகோணமலைஇந்தியா

மூதூரில் அரச பேருந்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து

Desktop Image Mobile Image

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று (19) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்ப விசாரணைகளின் படி, தோப்பூரிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அரச பேருந்தின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பகுதியில் மோதியதாக தெரியவந்துள்ளது.

 

 

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button