இந்தியா

நாளை விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதாக தகவல் !

Desktop Image Mobile Image

நாளையதினம்   (9) தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்கவுள்ளதாக   தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சியமைக்க மூன்றாவது முறையாக தற்போது ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார். இந்நிலையில் விஜய் சென்ற வழியில் அவரது தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வழியனுப்பியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை. முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று முன்தினம் மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார்.

 

 

அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.

தொடர்ந்து நேற்றும் கவர்னரை விஜய் சந்தித்திருந்தார். அப்போது, ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு எண்ணுடன் தன்னை வந்து சந்திக்குமாறு கவர்னர் கூறியிருந்தார் என தகவல் வெளியானது.

 

 

இதனை தொடர்ந்து பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறுவதற்கு வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தது. விசிகவும் ஆதரவு அளிக்கும் என எதிரபர்க்கப்படுகிறது.

இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னரை சந்திக்க திட்டமிட்டார். இதன்படி, இன்று மாலை   கவர்னரை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. ஆளுநர் நேரம் ஒதுக்கியதையடுத்து விஜய்  ஆளுநரை சந்தித்தமை  குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button