உழவு இயந்திரத்தில் சிக்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு – வவுனியாவில் சோகம்

வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள காளிகோயிலில் பணிகள் மேற்கொள்ளும் நோக்கில் உழவு இயந்திரம் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, எதிர்பாராத விதமாக குறித்த இளைஞன் உழவு இயந்திரத்திற்குள் தவறி விழுந்து சிக்குண்டுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் கனகராயன்குளம், குறிசுட்டகுளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய கஜேந்திரன் குகப்பிரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




