
தெற்கு அந்தமான் கடலுக்கு அருகிலும், வட சுமாத்ரா தீவுகளைச் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் இன்று (29) முதல் குறைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மணித்தியாலங்களில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வானிலை எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்படக்கூடிய கடற்பகுதிகளுக்கு பயணிக்கும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்பணிகளில் ஈடுபடுவோர் வானிலை நிலவரங்களை கருத்திற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




