
நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பலத்த மின்னல் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று (14) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்காக பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




