யாழ்ப்பாணம்இலங்கைவடக்கு மாகாணம்

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கில் அமைந்துள்ள சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (12) சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது இடம்பெற்ற வினோத உடைப் போட்டியில், செம்மணி புதைகுழி விவகாரத்தை நினைவூட்டும் வகையில் வேடமணிந்து வந்த சிறுவன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

“காரணமே இல்லாமல், அம்மாவின் மார்பில் பால் அருந்திய நிலையில் என்னைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைத்துவிட்டார்கள். எனக்கு நீதி கிடைக்குமா?” என்ற வாசகம் எழுதப்பட்ட உடையை அணிந்திருந்த சிறுவன், செம்மணி புதைகுழியில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தனது வேடத்தின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

சிறுவனிடம் விருந்தினர்கள், “நீங்கள் யாராக வந்துள்ளீர்கள்?” எனக் கேட்டபோது, “காரணமே இல்லாமல் செம்மணியில் என்னைப் புதைத்தார்கள்” என அவர் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து, “எங்கிருந்து, ஏன் இப்போது வந்துள்ளீர்கள்?” எனக் கேட்கப்பட்டபோது, “எனது இறப்புக்கும், என்னைப் போன்று புதைக்கப்பட்டவர்களுக்கும் நீதி கேட்டு செம்மணி புதைகுழியிலிருந்து வந்துள்ளேன். எமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என என்னுடன் புதைக்கப்பட்ட நண்பர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள்” என மழலை மொழியில் கூறியுள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

சிறுவனின் இந்தப் பதில்கள் அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்களை நெகிழ்ச்சியடையச் செய்ததுடன், செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான நீதிக்கான கோரிக்கையையும் மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளன.

 

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

இந்த கேள்விக்கு பதிலளிக்கவும்: WordPress எதற்குப் பயன்படுத்தப்படுகிறது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை