இலங்கைசெய்திகள்

நீர்வீழ்ச்சியில் முச்சக்கர வண்டி விபத்து ; இருவர் உயிரிழப்பு

Desktop Image Mobile Image

நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சி அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் இரண்டு முதியவர்களும், இரண்டு சிறுவர்களும் பயணித்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் இரு முதியவர்கள் உயிரிழந்த நிலையில், காயமடைந்த இரண்டு சிறுவர்களும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button