
மதுபோதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தைச் செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 58 வயதுடைய சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிச் செல்லும் 05ஆம் இலக்க வழித்தடப் பேருந்தை குறித்த சாரதி செலுத்திச் சென்றபோது, கடந்த வியாழக்கிழமை (19) சங்கராஜ மாவத்தையில் வைத்து மருதானை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸார் அவரைச் சோதனையிட முயன்றுள்ளனர்.
எனினும், பொலிஸாரின் நிறுத்துமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைப் புறக்கணித்த சாரதி பேருந்தை தொடர்ந்து செலுத்திச் சென்றுள்ளார். இதையடுத்து பொலிஸார் பேருந்தைப் பின்தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் சாரதி கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாரம்மலைப் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சாரதி புதுக்கடை இலக்கம் 07 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவருக்கு 35,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!