இலங்கைசெய்திகள்

வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும்

Desktop Image Mobile Image

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்வைத்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, எதிர்வரும் திங்கட்கிழமை (23) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிளைச் சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கிளைச் சங்கங்களின் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் அவசர சிகிச்சைச் சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் சங்கத்தின் நிறைவேற்றுச் சபைக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிறைவேற்றுச் சபை தீர்மானிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு வருடங்களில் வைத்தியர்களுக்குரிய கொடுப்பனவுகளில் கணிசமான பகுதியைத் தியாகம் செய்ததன் மூலம் 4.4 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் சேமிக்கப்பட்டுள்ளதாக GMOA குறிப்பிட்டுள்ளது.

எனினும், தொழில் வல்லுநர்களான வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அநீதிகளுக்குத் தீர்வாக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும், கடந்த நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் தமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இதனால் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில், வைத்திய சமூகத்திற்காக ஐந்து பிரதான கோரிக்கைகளை முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 2018ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முழுமையான DAT கொடுப்பனவை உடனடியாக வழங்குதல், DAT மற்றும் மேலதிக கடமை மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளுக்கு வரி விலக்கு அளித்தல், இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள மேலதிக கடமை மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளின் மூன்றில் ஒரு பங்கை மீண்டும் வழங்குதல் ஆகியவை அடங்குகின்றன.

மேலும், 22/99 சுற்றுநிருபத்திற்கு அமையத் தகுதி பெற்ற வைத்தியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குதல் மற்றும் வரிச் சலுகையுடனான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இக்கோரிக்கைகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் GMOA தெரிவித்துள்ளது.

வைத்தியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

பின்வரும் கேள்விக்கான சரியான விடை எது? ஒரு நிமிடத்தில் எத்தனை விநாடிகள் உள்ளன?
Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு