
மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக இன்று (20) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் 96 மாணவர்கள் இன்று காலை சுமார் 8.45 மணியளவில் காலை உணவை உட்கொண்ட பின்னர் வகுப்பறைகளில் இருந்தபோது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
அவர்களில் 30 மாணவர்கள் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். ஏனைய ஆறு மாணவர்களும் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!