
நாட்டின் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (நவம்பர் 22) காலை 11.31 மணிக்கு இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அம்பாறை, குருநாகல், களுத்துறை, கேகாலை, கொழும்பு, காலி, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தறை, மாத்தளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும்.
குறித்த மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!