விஜய் இன்று தமிழக முதல்வராக பதவியேற்கிறார்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (10) பதவியேற்கவுள்ளார்.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன் விஜய் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியை தமிழக ஆளுநர் வழங்கினார். அதேநேரம் எதிர்வரும் 13 ஆம் திகதி சட்டமன்றத்தில் பெரும்பான்யை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிகழ்வானது இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. விஜய்யுடன் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்கவுள்ள இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோருக்கு முக்கிய அமைச்சுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் விஜய்யின் பதவியேற்பு நிகழ்வில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக அவர் இன்று காலை 8.50 மணியளவில் சென்னை வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிகழ்வுக்கு 5000 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கிவ் குறியீட்டுடன் கூடிய அனுமதிப் பத்திரத்தை எடுத்து வருவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவரது பதவியேற்பு நிகழ்வு நேரலையாக ஔிபரப்பப்படவுள்ள நிலையில் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




