இலங்கை

மின்சாரக் கட்டணம் அதிரடி மாற்றம்

Desktop Image Mobile Image

2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய கட்டண முறைமை நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மின் உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள சுமார் 38 பில்லியன் ரூபாய் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்கும் பொருட்டு, அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்க இணங்கியுள்ளது. இந்த மானியச் சலுகை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

 

 

மாதந்தோறும் 180 அலகுகள் (Units) வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதாரண வீட்டு நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் மேற்கொள்ளப்படாது. எனினும், 210 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கான கட்டணங்கள் பயன்பாட்டு அளவிற்கு ஏற்ப அதிகரிக்கப்படவுள்ளன.

 

 

இதேவேளை மத ஸ்தலங்களைப் பொறுத்தவரை, 180 அலகுகள் வரையான பயன்பாட்டிற்கு கட்டண அதிகரிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட பயன்பாட்டுப் பிரிவுகளுக்கு கட்டண உயர்வு அமுலாகும்.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்குப் பாதிப்புகள் இல்லாத போதிலும், பாரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு சுமார் 18 சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அரச நிறுவனங்களுக்கான கட்டணங்கள் சராசரியாக 11 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

மின் உற்பத்திச் செலவு மற்றும் உலகளாவிய எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

இந்த கேள்விக்கு பதிலளிக்கவும்: உலகின் மிகச்சிறிய நாடு எது?
Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம்