மலையகம்இலங்கை

மரம் முறிந்து முச்சக்கர வண்டி மீது விழுந்து 3 பேர் பலி!

Desktop Image Mobile Image

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிய மாப்பாகந்தா பிரதான வீதியில் இன்று (04) காலை இடம்பெற்ற துயரமான விபத்தில், முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவரும், இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, முச்சக்கர வண்டி சாரதி உயிர் தப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாப்பாகந்தா பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரம் திடீரென முறிந்து விழுந்ததே இந்த விபத்திற்குக் காரணமாகியுள்ளது.

 

 

விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் நாவலப்பிட்டி பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர், சாலையில் விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் உடல்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

 

இந்நிலையில், நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மரத்தை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவாகவே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

இந்த கேள்விக்கு பதிலளிக்கவும்: தண்ணீர் 0°C இல் பொதுவாக என்ன ஆகிறது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி