இலங்கை

அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

Desktop Image Mobile Image

அனைத்து மதங்களையும் சேர்ந்த தலைவர்கள் சிறைச்சாலைகளில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுவதைச் சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவர் எழுதியுள்ள அவசரக் கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத் தலைவர்களில் ஒருவரான கலகொட அத்தே ஞானசார தேரரின் சிறைத்தண்டனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமைவாக அவருக்கு ஆடைகள் வழங்கப்பட்ட விவகாரம் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இந்த விவகாரம் தொடர்பில் பௌத்த மத பீடங்களும் கரிசனை காட்டி வரும் நிலையில், பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் நலன்களுக்காக இந்த விவகாரம் பயன்படுத்தப்பட்டு, நாட்டில் தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தனது பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

அதேவேளை, இந்த விவகாரத்துக்கு சட்டத் திருத்தங்கள் மூலம் நிரந்தரத் தீர்வு காணப்படும் போது, சிறைகளில் அடைக்கப்படும் ஏனைய மதத் தலைவர்களும் கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் தெளிவாக உள்ளடக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

1980களில் வெலிக்கடை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் தாம் இருந்த காலத்தில், சக கைதிகளாக இருந்த மதத் தலைவர்கள் அநாகரிகமாக நடத்தப்படுவதைக் கண்டு வேதனையடைந்த தருணங்கள் நினைவுக்கு வருவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பணியாற்றிய காலத்தில், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் தாங்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களைத் தமக்குக் கடிதங்கள் மூலமும் உறவினர்கள் ஊடாகவும் தெரியப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகொண்டு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும் இத்தகைய அனுபவங்கள் இருக்கும் என நம்புவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அனைத்து மதத் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடத்தப்படுவதைச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்: ஒரு மணிநேரத்தில் எத்தனை நிமிடங்கள் உள்ளன?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம்