ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது!

‘சிரிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைக்காக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த முன்பிணை மனு தொடர்பில் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் நேற்று (06) விசாரணை நடத்தியதுடன், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி தமது தரப்பு விளக்கங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
ஷிரந்தி ராஜபக்ச கடந்த 5ஆம் திகதி இரவு வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியதாகவும், அவருக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை, அவரின் தலைமையின் கீழ் இயங்கியதாக குறிப்பிடப்படும் ‘சிரிலிய சவிய’ அமைப்பின் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பானதாகும். விசாரணையில் 10 மில்லியன் ரூபாய் நிதி பரிவர்த்தனை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகாரிகள் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




