அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கையரான சிராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி, திருகோணமலையில் இன்று (25) மாலை கவனயீர்ப்பு போராட்டமும் ஊர்வலமும் இடம்பெற்றது.
திருகோணமலை இறையிறக்க தேவாலயத்திற்கு முன்னால் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மெழுகுதிரிகளை ஏந்தியவாறு அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அங்கிருந்து ஊர்வலமாகப் பயணித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
ஊர்வலம் மொட்டைப்புலி வைரவர் ஆலயத்தை சென்றடைந்ததையடுத்து, அங்கு இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மரண தண்டனைக்கு மாற்றாக மன்னிப்பு அல்லது தண்டனைத் தளர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கையாக இருந்தது.
இதேவேளை, அனோஜன் தொடர்பான விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




