வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை!

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (12) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை, நாளை (13) அதிகாலை 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலும் இந்த மின்னல் அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதுடன், தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் திறந்தவெளிகளில் இருப்பதைத் தவிர்த்து, இடியுடன் கூடிய மழையின்போது பாதுகாப்பான இடங்களில் தங்குவதுடன், மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




