இலங்கை

33 நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

Desktop Image Mobile Image

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது பெருக்கெடுத்து வருவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (13) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த தகவல் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

பெருக்கெடுத்து வரும் பிரதான நீர்த்தேக்கங்களில் அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, பதுளை மாவட்டத்தின் அம்பேவெல, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மௌ-ஆர, லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில யோதவாவி மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்கள் அடங்குகின்றன.

மேலும், குருநாகல் மாவட்டத்தின் அம்பகொலவாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களும், கண்டி மாவட்டத்தின் நாலந்த மற்றும் வேமெடில்ல நீர்த்தேக்கங்களும், மொனராகலை மாவட்டத்தின் அலிகொட்டஹார நீர்த்தேக்கமும், மன்னார் மாவட்டத்தின் யோதவாவியும் தற்போது பெருக்கெடுத்து வருகின்றன.

குறிப்பாக, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 14,000 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதேபோன்று, லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 4,100 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவிற்கும், வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கையினுக்கும் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஆறுகள் மற்றும் நீர்வழிகளை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

இந்த கேள்விக்கு பதிலளிக்கவும்: தாவரங்களில் நீரை உறிஞ்சும் பகுதி எது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்