வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்; 20 சதவீதக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு!

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களின் பல்வேறு உரிமைகள் மற்றும் சம்பள அதிகரிப்புக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு (MCA) உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசாங்கங்களிடம் வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும், இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கமும் தமது கோரிக்கைகளை நிராகரித்துள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ள அவர்கள், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமக்கான நிவாரணங்கள் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இதுவரை வழங்கப்பட்டு வந்த 20 சதவீதக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக நேரக் கொடுப்பனவு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால் தமது உரிமைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவ்வாறு தீர்வுகள் வழங்கப்படாத பட்சத்தில், கூட்டுக்குழுவின் தீர்மானத்திற்கமைய எதிர்காலத்தில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் ஊழியர் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!