பாகிஸ்தானில் கோர விபத்து! எரிவாயு தாங்கி லொறியுடன் மோதிய பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 10 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தின் டுர்பெட் நகரிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எரிவாயு தாங்கி லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த மோதலைத் தொடர்ந்து பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்து நேரத்தில் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பேருந்தில் பயணித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!