இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு

இந்தோனேசியாவுக்கு அருகிலுள்ள பெண்டா தீவுப் பகுதியில் இன்று (21) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
சர்வதேச புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 மெக்னிடியூட்டாகப் பதிவாகியுள்ளது.
பிற்பகல் 3.12 மணியளவில் பூமிக்கு அடியில் 156 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் தாக்கம் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடற்பரப்புகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
பெண்டா தீவுப் பகுதியில் அண்மையில் 6.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஒன்றும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!