இலங்கை

GovPay கட்டணம் ஏற்க மறுக்கும் பொலிஸார் மீது நடவடிக்கை – பொலிஸ் எச்சரிக்கை

Desktop Image Mobile Image

GovPay அமைப்பு மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் எச்சரித்துள்ளது.

வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதற்கும், அபராதம் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களால் நேரமும் செலவும் வீணாகாமல் தடுப்பதற்கும் 2025 ஏப்ரல் மாதத்தில் GovPay கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் அனைத்து ஒன்பது மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும், இந்தச் சேவையை எளிதாக்கும் வகையில் லங்காபே ஊடாக பொலிஸ் நிலையங்களுக்கு சுமார் 4,000 கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தகுதியான போக்குவரத்து அபராதங்களில் சுமார் 12 சதவீதம் GovPay ஊடாக செலுத்தப்பட்டு வருகின்றன.

எனினும், சில போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் GovPay மூலம் பணம் செலுத்த விரும்பும் சாரதிகளின் கோரிக்கையை நிராகரித்து, பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்துவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

 

 

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சில அதிகாரிகள் வழங்கப்பட்ட சாதனங்களை எடுத்துச் செல்லாததும், சிலரின் திறமையின்மை மற்றும் சேவை மனப்பான்மை குறைபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு அதிகாரி GovPay முறை பற்றித் தெரியாது அல்லது அந்த வசதி இல்லை எனக் கூறினால் அது கடமை தவறாகவும் ஒழுங்கு மீறலாகவும் கருதப்படும் என பொலிஸ் எச்சரித்துள்ளது.

GovPay மூலம் அபராதம் செலுத்த அனுமதிக்க மறுக்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் 070 4756600 என்ற ஹாட்லைன் இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News:-samugammedia

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

பொது அறிவு கேள்வி: திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி