இந்தியா

அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (திங்கட் கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய, தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை முடிவு செய்யும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 10 மணி நிலவரப்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 103 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.

இதனையடுத்து சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்க பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

இதனிடையே, சில தொகு​தி​களில் வெற்றி பெறும் தவெக வேட்​பாளர்​களை குதிரை பேரத்​தின் அடிப்​படை​யில் இழுக்க திமுக, அதி​முக முயற்சி செய்​ய​லாம் என விஜய்க்கு தகவல் கிடைத்​த​தாக கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, இரண்டு நாட்​களுக்கு முன்பு கட்​சி​யின் வேட்​பாளர்​களு​டன் ஆலோ​சனை நடத்​திய விஜய், ‘வெற்றி பெற்​றதும் வேறு எங்​கும் செல்​லாமல் பனையூருக்கு வந்​துவட வேண்​டும். உங்​களுக்​காக நான் காத்​திருப்​பேன்’ என அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

 

 

இந்​நிலை​யில், மாமல்​லபுரம் அருகே பூஞ்​சேரி​யில் உள்ள ஒரு தனி​யார் விடு​தியை தவெக​வினர் தயார் செய்து வைத்​துள்ளதாகவும்,வெற்றி பெறும் வேட்​பாளர்​களை அங்கு தங்க வைக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கின்றது.

அதன்​படி, வெற்றி பெற்ற எம்​எல்​ஏ-க்​களை பாது​காப்​பாக வைக்க பூஞ்​சேரி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் 100 பேர் தங்​கும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்யப்​பட்​டுள்​ளன.

வேட்​பாளர்​களை அந்த இடத்​துக்கு அழைத்து வரும் முக்​கிய பொறுப்பை ஆதவ் அர்​ஜு​னா​விடம் விஜய் ஒப்படைத்​துள்​ளதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் இல்லம் செல்லும் வழியில் கபாலீஸ்வரர் நகரில் வாகனங்களை உள்ளே விட பொலிஸ் அனுமதி மறுத்துள்ளது.

அதேபோல், “விஜய் வெளியே சென்றால் வாகனத்தை பின்தொடர கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும். ரசிகர்கள் அதிக அளவில் கூட கூடாது. இருசக்கர வாகனத்தில் சென்று விபத்துக்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அக்கறை முதல் நீலாங்கரை வரை 300க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்” என்றும் பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button