மலையகம்இலங்கை

மலையகத்தில் கடும் மழை எச்சரிக்கை: மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு – மண்சரிவு அபாயம் தீவிரம்

Desktop Image Mobile Image

மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை, பலத்த காற்று மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில், இன்று (02) காலை பலத்த காற்றின் தாக்கத்தால் மரம் ஒன்று முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.

இதனால் அந்த வீதியில் போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சாரதிகள் மாற்று ஏற்பாடுகளுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணிகள் பிரதேச மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் – நுவரெலியா மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகளின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், அத்தியாவசிய தேவையின்றி பயணங்களைத் தவிர்க்குமாறும், பயணம் செய்ய வேண்டியவர்கள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

இன்றைய பொது அறிவு கேள்வி: உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது? அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது? வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாட்டுக்கு அனுமதி வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாட்டுக்கு அனுமதி பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம் பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம் மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத வவுனியா கள்ளிக்குளம் வீதி – ஆளுநர் முக்கிய உறுதி தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி அரேபியா களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது? அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது? வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாட்டுக்கு அனுமதி வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாட்டுக்கு அனுமதி பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம் பொலன்னறுவை – ஹபரணை வீதியில் பேருந்து விபத்து; 22 பேர் காயம்