
மாரவில பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர், சிறுமியின் தந்தையுடன் நெருங்கிய நட்பில் இருந்து, அந்த நம்பிக்கையை பயன்படுத்தி சிறுமியுடன் பழகியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 அவசர சேவைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




