இலங்கைசெய்திகள்

சுவாசக் கோளாறால் 20 வயது யுவதி உயிரிழப்பு; விமானப் பணிப்பெண் கனவு சோக முடிவு

Desktop Image Mobile Image

பாணந்துறை – ஹிரன பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியொருவர் சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஒடித்யா முதுமாலி விஜேசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வந்ததுடன், எதிர்காலத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்ற வேண்டும் என்ற இலக்குடன் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறு வயதிலிருந்தே சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறலுக்குப் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button