சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் சந்திப்பு; ரசிகர்கள் உற்சாகம்

லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் நடிகர் அஜித்குமாரும் சந்தித்துக் கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Michelin Le Mans Cup கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்குமாரை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவரை ஆரத்தழுவி பந்தயத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.
தொடர்ந்து விஜய் மற்றும் அஜித் இருவரும் இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர். இந்தக் காட்சியை நேரில் பார்த்த இங்கிலாந்து வாழ் தமிழர்களும் ரசிகர்களும் உற்சாகமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சில்வர்ஸ்டோன் பகுதியில் திரண்டிருந்த லண்டன் வாழ் தமிழர்கள் முதலமைச்சர் விஜயுடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகளை எடுத்துக்கொண்டதுடன், ஆட்டோகிராபும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அஜித்குமார் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் நிலையில், அவர் கலந்துகொள்ளும் Michelin Le Mans Cup போட்டியின் சில்வர்ஸ்டோன் சுற்று இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
அஜித்குமார் உள்ளிட்ட இந்திய கார் பந்தய வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், தமிழக முதலமைச்சராக விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!




