கிளிநொச்சிசெய்திகள்வடக்கு மாகாணம்
தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலாவது நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமை தாங்கியுள்ளார்.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நினைவேந்தலில் பங்கேற்றுள்ளனர்.

பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
இன்றைய பொது அறிவு கேள்வி: ரஷ்யாவின் தலைநகர் எது?



