இலங்கை

அம்பாறையில் 14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல்: மௌலவி நீதிமன்றில் சரணடைப்பு

Desktop Image Mobile Image

அம்பாறையில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான அவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், பின்னர் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இதையடுத்து, சந்தேகநபரை ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

மேலும், பிரதான சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் 21 வயதுடைய மற்றொரு மௌலவியும் ஏற்கனவே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button